கொரோனா பரவலை தடுக்க விழிப்புணர்வு


கொரோனா பரவலை தடுக்க விழிப்புணர்வு
x
தினத்தந்தி 22 March 2021 6:02 PM GMT (Updated: 22 March 2021 6:02 PM GMT)

சங்கராபுரம் ஊராட்சியில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

காரைக்குடி,

மாவட்ட நிர்வாகம் உத்தரவின் பேரில் சங்கராபுரம் ஊராட்சி சார்பில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களிடம் துண்டுபிரசுரம் வினியோகிக்கும் நிகழ்ச்சி நடந்தது.  நிகழ்ச்சிக்கு ஊராட்சிகளின் உதவி இயக்குனர் சண்முகம் தலைமை தாங்கினார். காரைக்குடி பர்மா காலனி பஸ் நிறுத்தம் அருகில் பொதுமக்களிடம் கட்டாயமாக முக கவசம் அணிய வலியுறுத்தியும், பொது இடத்தில் எச்சில் துப்பாமல் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும் முககவசம் அணியாத நபர்களுக்கு ரூ.200ம், பொது இடங்களில் எச்சில் துப்பும் நபர்களுக்கு ரூ.500ம் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் (பொறுப்பு) பாண்டியராஜன், துணைத்தலைவர் பிரதீப், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஜோசப்அருள்ராஜ், வட்டார வளர்ச்சி பொன்னுச்சாமி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் அண்ணாமலை நன்றி கூறினார்.

Next Story