கோவையில் கால் பதித்து ஓராண்டு நிறைவு 57132 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா


கோவையில் கால் பதித்து ஓராண்டு நிறைவு 57132 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா
x
தினத்தந்தி 22 March 2021 11:41 PM IST (Updated: 22 March 2021 11:42 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் கொரோனா கால்பதித்து நேற்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றது. இதில் 57,132 பேருக்கு கொரோனா பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. 686 பேர் வரை பலியாகி உள்ளனர்.

கோவை,

கடந்த ஆண்டு இந்தியா முழுவதும் கொரோனா பரவியது. ஜெர்மனி நாட்டில் இருந்து கோவை திரும்பிய மாணவி ஒருவருக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் 22-ந் தேதி கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதன் மூலம் கோவை மாவட்டத்தில் கொரோனா முதல் முறையாக கால் பதித்தது. கோவையில் நேற்றுடன் ஓராண்டு நிறைவு பெற்று உள்ளது. இந்த கொரோனா கோவையில்  57,132 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் 686 பேர் வரை பலியாகி உள்ளனர். 

மீண்டும் தலை தூக்குகிறது 

இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக கட்டுக்குள் இருந்த கொரோனா தற்போது மீண்டும் தலை தூக்க தொடங்கி உள்ளது. அதன்படி கோவையில் கடந்த ஒரு வாரமாக தினமும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 100-க்கும் மேல் செல்கிறது. 

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் முறையாக பின்பற்றாததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

முகக்கவசம் கட்டாயம்

கோவையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு ஒரு ஆண்டு நிறைவடைந்து உள்ளது. கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த கொரோனா வைரஸ் தற்போது அதிகரிக்க தொடங்கி உள்ளது. 

எனவே பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

தற்போது கோவை புறநகர் பகுதிகளில் தான் அதிகளவில் கொரோனா தொற்று பாதிப்பு இருந்து வருகிறது. ஒரு தெருவில் 3 பேர் வீதம் பாதிக்கப்பட்டால் அந்த பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படும். 

18 இடங்கள் 

அதன்படி தற்போது மாநகர பகுதியில் 7,  புறநகரில் 11 என  ெமாத்தம் 18 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, கொரோனா தடுப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. 

வீடுகளின் முன்பு தனிமைப்படுத்தப்பட்ட வீடு என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வருகிறது.  கொரோனாவை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். 

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story