வேலூர் மாநகராட்சிகமிஷனரை கண்டித்து அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
வேலூர் மாநகராட்சி கமிஷனரை கண்டித்து அலுவலர்கள் தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர்
வேலூர் மாநகராட்சி கமிஷனரை கண்டித்து அலுவலர்கள் தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உள்ளிருப்பு போராட்டம்
வேலூர் மாநகராட்சி கமிஷனராக பணியாற்றி வருபவர் சங்கரன். இவர் மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை அவதூறாகவும், மிகவும் தரம் தாழ்த்தியும் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் உதவியாளர் சதாசிவம் என்பவர் கடந்த 18-ந்தேதி சாலை விபத்தில் உயிரிழந்தார்.
அவர் வசூல் பணியில் தமக்கு ஒதுக்கப்பட்ட இலக்கினை முடித்து வந்ததாகவும், அவரை காலை 8 மணிக்கு வரவழைத்து இரவு 9.30 மணி வரையில் மனரீதியாக துன்புறுத்திய காரணத்தினால்தான் அவர் விபத்துக்குள்ளாகி மரணமடைந்ததாக மாநகராட்சி ஊழியர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
சதாசிவத்திற்கு நேர்ந்த நிகழ்வு தங்களுக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்றும், இதுபோன்று மேலும் நடப்பதை தடுக்க கமிஷனரை கண்டித்து மாநகராட்சி அலுவலகத்தில் அலுவலர்கள், ஊழியர்கள் திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டமைப்பு மாநில பொதுச்செயலாளர் சீதாராமன் தலைமை தாங்கினார். 2-வது மண்டல உதவி கமிஷனர் மதிவாணன் மற்றும் அனைத்து மண்டல அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.
உள்ளிருப்பு போராட்டம் நடந்து கொண்டிருந்த போது மாநகராட்சி கமிஷனர் சங்கரன் அலுவலகத்திற்கு வந்தார்.
அவரது அறைக்கு சென்ற அவர் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். ஆனால் அவர்கள் செல்ல மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வருத்தம் தெரிவித்தார்
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கமிஷனர் சங்கரன் கையெடுத்து கும்பிட்டு வருத்தம் தெரிவித்து, இனி இதுபோன்ற தவறு நடக்காது என உறுதியளித்ததார்.
பின்னர் அலுவலர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story