வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் இருப்பு வைக்கப்படும் அறையில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று தேர்தல் பார்வையாளர்கள் கலெக்டர் விஜயகார்த்திகேயனிடம் தெரிவித்தனர்.
வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் இருப்பு வைக்கப்படும் அறையில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று தேர்தல் பார்வையாளர்கள் கலெக்டர் விஜயகார்த்திகேயனிடம் தெரிவித்தனர்.
திருப்பூர்,
வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் இருப்பு வைக்கப்படும் அறையில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று தேர்தல் பார்வையாளர்கள் கலெக்டர் விஜயகார்த்திகேயனிடம் தெரிவித்தனர்.
வாக்கு எண்ணும் மையம்
திருப்பூர் மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளில் 3 ஆயிரத்து 343 வாக்குச்சாவடிகள் உள்ளன. மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமையில் பொது பார்வையாளர்கள் ரவி சங்கர் பிரசாத் (தாராபுரம், காங்கேயம்), சந்தர் பிரசாத் வர்மா (அவினாசி), உமாநந்தா டோலி (திருப்பூர் வடக்கு), மாஷீர் ஆலம் (திருப்பூர் தெற்கு மற்றும் பல்லடம்), கபில் மீனா (உடுமலை, மடத்துக்குளம்), காவல்துறை பார்வையாளரான நிலாப் கிஷோர் ஆகியோர் நேற்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் செலவினங்களை கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ஊடக சான்று மற்றும் கண்காணிப்பு அறையை ஆய்வு செய்தனர். மேலும் செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி செந்தில்குமாரிடம் விவரம் கேட்டனர்.
இதைத்தொடர்ந்து தேர்தல் தொடர்பான மாவட்ட தொடர்பு அலுவலகத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பின்னர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தை ஆய்வு செய்தனர். திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவினாசி, பல்லடம், காங்கேயம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளில் பதிவாகும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்புடன் இருப்பு வைப்பதற்கான பாதுகாப்பு அறையை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பாதுகாப்பு அறை கட்டிடத்தின் ஜன்னல்களை செங்கல் கொண்டு சுவர் அமைக்கவும், இரும்பு கம்பிகளால் தடுப்பு அமைக்கவும் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
14 மேஜைகள்
மேலும் வாக்கு எண்ணும் அறையில் 14 மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்கு எண்ணப்பட உள்ளது. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் வாக்குப்பதிவு எந்திரங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. வேட்பாளர்களின் முகவர்கள் நிற்பதற்கு போதுமான இடம் வாக்கு எண்ணும் அறையில் உள்ளதா? என்று அதிகாரிகள் விவரங்கள் கேட்டனர்.
பாதுகாப்பு அறை மற்றும் வாக்கு எண்ணும் அறை தயார்படுத்தும் பணிகள் தொடர்ந்து வருகிறது. இந்த பணிகள் அனைத்தையும் வருகிற 31-ந் தேதிக்குள் முடிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு மீண்டும் வந்து தேர்தல் பார்வையாளர்கள் வாக்கு எண்ணும் மையத்தை ஆய்வு செய்ய உள்ளனர். மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷா மித்தல், மாவட்ட வருவாய் அதிகாரி சரவணமூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ரூபன் சங்கர் ராஜ், தேர்தல் தாசில்தார் முருகதாஸ் ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story