வெள்ளகோவில்ஆனந்த விநாயகர் கோவிலில் சங்காபிஷேகம்
வெள்ளகோவில்ஆனந்த விநாயகர் கோவிலில் சங்காபிஷேகம்
வெள்ளகோவில், மார்ச்.23-
வெள்ளகோவில் எல்.கே.சி. நகரில் உள்ள ஆனந்த விநாயகர் கோவில் வளாகத்தில் புதிதாக ஐம்பொன்னால் புற்றிடம் கொண்டீஸ்வரர் மற்றும் நந்தி பெருமான் சிலை வைக்கப்பட்டுள்ளது. அதற்கு கடந்த 10-ந்தேதி சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து தினசரி சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு வருகிறது. 12-ம் நாளையொட்டி நேற்று மாலை புற்றுக்கண் ஆனந்த விநாயகர் கோவில் வளாகத்தில் உள்ள புற்றிடம் கொண்டீஸ்வரர் மற்றும் நந்தி பெருமானுக்கு சங்காபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு பூஜைகள், சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது இதற்கான ஏற்பாடுகளை எல்.கே.சி.நகர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story