ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் 57 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் 57 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
ராணிப்பேட்டை
இறுதி வேட்பாளர் பட்டியல்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ராணிப்பேட்டை, அரக்கோணம் (தனி), ஆற்காடு, சோளிங்கர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி 57 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
போட்டியிடும் வேட்பாளர்களின் கட்சி, பெயர், சின்னம் வருமாறு:-
ராணிப்பேட்டை
1.ஆர்.காந்தி (தி.மு.க.) - உதயசூரியன், 2. எஸ்.எம்.சுகுமார் ( அ.தி.மு.க.) இரட்டை இலை, 3.ஏ.யுவராஜ் (பகுஜன் சமாஜ்) - யானை 4. எம்.ஆதம்பாஷா (மக்கள் நீதி மய்யம்) - டார்ச் லைட், 5. டாக்டர் கே.சத்யராஜ் (தமிழ்நாடு இளைஞர் கட்சி) - மோதிரம், 6. வி.சைலஜா (நாம் தமிழர் கட்சி) - விவசாயி சின்னம், 7. ஜி.வீரமணி (அ.ம.மு.க) - குக்கர், 8. எஸ்.காந்தி (சுயே)- கிரிக்கெட் மட்டை, 9. கே.சக்திவேல் நாதன் (சுயே) - அயன்பாக்ஸ்., 10. என்.சுகுமார் (சுயே) - ஹெலிகாப்டர், 11. ஏ.மன்சூர் பாஷா (சுயே) -ஆட்டோ, 12. ஏ.மணிகண்டன் (சுயே) - டிராக்டர், 13. எஸ்.யுவராஜ் (சுயே) - பரிசு பெட்டகம், 14. எஸ்.ஜெயக்குமார் (சுயே) - வைரக்கல்.
இந்த தகவலை ராணிப்பேட்டை தேர்தல் நடத்தும் அலுவலர் கே.இளம்பகவத் தெரிவித்தார்.
அரக்கோணம் (தனி)
அரக்கோணம் தனி தொகுதியில் 13 பேர் போட்டியிடுகின்றனர். அவர்கள் விவரும் வருமாறு:-
1. பா.சுதாகர் (பகுஜன் சமாஜ்) - யானை, 2. சு.ரவி (அ.தி.மு.க.) - இரட்டை இலை, 3. எ.அபிராமி எழில் (நாம் தமிழர்கடசி) - விவசாயி, 4. சு.பாஸ்கரன் (மக்கள் நீதி மய்யம்) - டார்ச் லைட், 5. கே.சி.மணிவண்ணன் (அ.ம.மு.க.) - குக்கர், 6. ஜா.கவுதமசன்னா (விடுதலை சிறுத்தைகள்)- பானை, 7. ஆ.கவுதமன் (சுயே)- கால்பந்து, 8. சி.மோ.கவுதமன் (சுயே) - மோதிரம், 9. மு.மணிகண்டன் (சுயே) - பரிசு பெட்டகம், 10. மு.மதன்ராஜ் (சுயே)- ஆட்டோ ரிக்சா, 11. சி.மோகன் (சுயே) - கேமரா, 12. பொ.ரவி (சுயே)- டி.வி., 13. வே.ரவி (சுயே) - இரட்டை மின் கம்பம்.
இந்த தகவலை அரக்கோணம் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவதாஸ் தெரிவித்தார்.
ஆற்காடு
ஆற்காடு தொகுதியில் 12 பேர் போட்டியிடுகின்றனர். அவர்கள் விவரம் வருமாறு:-
1.ஜெ.எல்.ஈஸ்வரப்பன் (தி.மு.க.) - உதயசூரியன், 2. அ.சி.மோகன் - (பகுஜன் சமாஜ்) - யானை, 3. கே.எல்.இளவழகன் (பா.ம.க.) - மாம்பழம், 4. ரா.கதிரவன் (நாம் தமிழர் கட்சி) - விவசாயி, 5. எச்.முகமது கவுஸ் (திப்பு சுல்தான் கட்சி) - டிராக்டர், 6. முகமது சபி (மக்கள் நீதி மய்யம்) - டார்ச் லைட், 7. முனிவேல் (இந்திய தேசிய ஜனநாயக கட்சி) - குளிர்சாதன பெட்டி, 8. என்.ஜனார்த்தனன் (அ.ம.மு.க.) - குக்கர், 9. பெ.ஈஸ்வரன் (சுயே) - கேமரா, 10. டி.சி.சண்முகம் சுயே)- ஆட்டோ, 11. மணிகண்டன் (சுயே)- அன்னாசி பழம், 12. கு.வசந்தகுமார் (சுயே)- பானை.
இந்த தகவலை ஆற்காடு தேர்தல் நடத்தும் அலுவலர் மணிமேகலை தெரிவித்தார்.
சோளிங்கர்
1. எம்.கிரிதரன் (பகுஜன் சமாஜ்) - யானை, 2. ஏ.எம்.முனிரத்தினம் (காங்கிரஸ்) - கை, 3. அ.ம.கிருஷ்ணன் (பா.ம.க.) - மாம்பழம், 4. என்.ஜி.பார்த்திபன் (அ.ம.மு.க. (குக்கர்), 5. யு.ரா.பாவேந்தன் (நாம் தமிழர் கட்சி) கரும்பு விவசாயி, 6. ரா.வினோத் வீரத்தியாகி விஸ்வநாத தாஸ் தொழிலாளர்கள் கட்சி) - சிறு உரலும் உலக்கையும், 7. ஜி.விஜயகுமார் (தேசிய சிறுபான்மையினர் மக்கள் இயக்கம்) - தென்னந்தோப்பு, 8. ரா.ஜவகர் (மக்கள் நீதி மய்யம்) - டார்ச் லைட், 9. தா.ராஜேந்திரன் (சுயே)- பலாப்பழம், 10. ஆர். ஏழுமலை (சேுய)- ஆட்டோ ரிக்ஷா, 11. கி.சேகர் (சுயே) - அன்னாசி பழம், 12. எம்.பழனி (சுய) - குடைமிளகாய், 13. பா.பார்த்திபன் (சுயே) - அலமாரி, 14. ஜெ.பாலாஜி (சுயே) - வாயு சிலிண்டர், 15. க. மணி (சுயே) - அமிழ்சுருள், 16. என்.மணி (சுயே) - சீர்வளி சாதனம், 17. சி.முனிரத்தினம் (சுயே) - டிராக்டர் இயக்கும் உழவன், 18. எம். முனிரத்தினம் (சுயே) - நடைவண்டி.
இந்த தகவலை தேர்தல் நடத்தும் அலுவலர் பார்த்தசாரதி தெரிவித்தார்.
Related Tags :
Next Story