பிணமாக கிடந்த குழந்தை
பிணமாக கிடந்த குழந்தை
ஆலங்குளம்,மார்ச்
ஆலங்குளம் அருகே சுண்டங்குளம் கிராமத்தில் 2 வீடுகளுக்கு இடையே உள்ள சந்துப் பகுதியில் குழந்தை பிணமாக கிடந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலர் லட்சுமிக்கு தகவல் தெரிவித்தனர். அவர் இது குறித்து போலீசில் புகார் செய்தார். ஆலங்குளம் சப்-இன்ஸ்பெக்டர் செண்பகவேலன், வெம்பக்கோட்டை இன்ஸ்பெக்டர் பாலாஜி ஆகியோர் விரைந்து வந்து குழந்தையின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையின் பிணத்தை போட்டுச் சென்றது யார், குழந்தை தகாத உறவில் பிறந்ததால் போட்டு விட்டுச் சென்றார்களா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story