வடகாடு முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்


வடகாடு முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்
x
தினத்தந்தி 23 March 2021 1:24 AM IST (Updated: 23 March 2021 1:24 AM IST)
t-max-icont-min-icon

வடகாடு அருகே முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.

வடகாடு, மார்ச்.23-
வடகாடு அருகே முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
பால்குடம்
வடகாடு அருகே வாணக்கன் காட்டில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது.  இக்கோவில் திருவிழா கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
இதையொட்டி பக்தர்கள் அம்மனுக்கு விரதமிருந்து, பால்குடம் மற்றும் காவடிகள் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.  
தேரோட்டம்
9-வது நாள் திருவிழாவான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக முத்துமாரியம்மன் பல்லக்கில் கொண்டு வரப்பட்டு அலங்காரம் செய்யப்பட்ட தேரில் எழுந்தருளினார். பின்னர் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேர் ரதவீதிகளில் வலம் வந்து மீண்டும் நிலையை வந்தடைந்தது.
விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தேரோட்டத்தையொட்டி அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் நடைபெறாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

Next Story