ரூ.2 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்


ரூ.2 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 23 March 2021 1:42 AM IST (Updated: 23 March 2021 1:42 AM IST)
t-max-icont-min-icon

ரூ.2 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்

ஸ்ரீவில்லிபுத்தூர்,மார்ச்
ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள இந்திரா நகர் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கிருஷ்ணன்கோவிலில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி ஒரு மினி வேன் வந்து கொண்டிருந்தது. போலீசாரை பார்த்ததும் வேன் டிரைவர் சரக்கு வேனை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார்.
அந்த வேனில் சோதனை நடத்தியபோது சுமார் 515 கிலோ எடை கொண்ட புகையிலை பொருட்கள் இருந்தன. அதன் மதிப்பு சுமார் ரூ.2 லட்சத்து 15 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது. விசாரணையில், அந்த வாகனம் தேனியைச் சேர்ந்த பவுல்ராஜ் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story