ஆட்டோ டிரைவர் தற்கொலை
ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்
நாகமலைபுதுக்கோட்டை
நாகமலைபுதுக்கோட்டை அருகே உள்ள மேலக்குயில்குடி கோகிலா நகரை சேர்ந்தவர் வினோத்(வயது 35). ஆட்டோ ஓட்டி வருகிறார். கடந்த 5 வருடங்களுக்கு முன்பு வளர்மதி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. வினோத்திற்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று வினோத் வீட்டை விட்டு வெளியேறி சென்றவர் மறுநாள் காலை வரை வீடு திரும்பவில்லை. அக்கம்பக்கத்தில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் அப்பகுதியில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு வினோத் தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து நாகமலைபுதுக்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story