மக்கள் சமூக நீதி பேரவையினர் நூதன ஆர்ப்பாட்டம்


மக்கள் சமூக நீதி பேரவையினர் நூதன  ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 March 2021 2:27 AM IST (Updated: 23 March 2021 2:27 AM IST)
t-max-icont-min-icon

மக்கள் சமூக நீதி பேரவையினர் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முசிறி
முசிறியில் குரும்பர் இன மக்களுக்கு உள் ஒதுக்கீடு கோரி மக்கள் சமூக நீதி பேரவையினர் கையில் பானையை ஏந்தியும், சங்கு ஊதியும் கோஷம் எழுப்பியவாறு முசிறி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று முசிறி தாசில்தார் அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் சமூக நீதி பேரவை மாவட்ட செயலாளர் பிச்சைவேல் தலைமை தாங்கினார்.  30 லட்சம் குறும்பர் இன மக்களுக்கு 5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும். குரும்பர் நலவாரியம் அமைக்க வேண்டும். கால்நடை வாரியம் அமைத்து ஆடு, மாடு மேய்ப்பதை தொழிலாக கொண்டுள்ள குறும்பர் இனத்திற்கு வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் குறும்பர் சங்க மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார் உள்பட பலர் பங்கேற்றனர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் துணை தாசில்தார் சரவணனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.


Next Story