அகில இந்திய கிராமிய தபால் ஊழியர் சங்க மாநாடு
பாவூர்சத்திரத்தில் அகில இந்திய கிராமிய தபால் ஊழியர் சங்க மாநாடு நடந்தது.
பாவூர்சத்திரம், மார்ச்:
கோவில்பட்டி கோட்ட அகில இந்திய கிராமிய தபால் ஊழியர் சங்க 11-வது கோட்ட மாநாடு பாவூர்சத்திரத்தில் நடைபெற்றது. கோவில்பட்டி கோட்ட தலைவர் நெல்லையப்பன் தலைமை தாங்கினார். உலகநாதன் தேசிய கொடியையும், முன்னாள் மாநில செயலர் ஜான்பிரிட்டோ சங்க கொடியையும் ஏற்றி வைத்தனர். தென் மண்டல செயலர் ராமசாமி, மாநில அமைப்பு செயலர் ஞானபாலசிங், கோட்ட செயலாளர்கள் கருப்பையா, பர்னபாஸ், கோட்டத்தலைவர் அசோக்குமார், பிச்சையா, முருகேசன், ராஜாமணி உள்பட பலர் பலர் கலந்து கொண்டு பேசினார்கள். மாநாட்டில் கிளை அஞ்சல் ஊழியர்களுக்கு இலாகா அந்தஸ்து வழங்க வேண்டும். கமலேஷ் சந்திரா கமிட்டி பரிந்துரை செய்துள்ள 180 நாட்கள் விடுமுறை சேமிப்பு, மருத்துவ வசதி, குழு இன்சூரன்ஸ் தொகையை உயர்த்தி வழங்குதல் ஆகியவைகளை உடனே அமல்படுத்த வேண்டும். அஞ்சலக உதவியாளர் தேர்வில் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புஷ்பா தேவி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story