தென்காசி மாவட்டத்தில் ரூ.3.37 லட்சம் பறிமுதல்


தென்காசி மாவட்டத்தில் ரூ.3.37 லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 23 March 2021 2:36 AM IST (Updated: 23 March 2021 2:36 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி மாவட்டத்தில் ரூ.3.37 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

அச்சன்புதூர், மார்ச்:
தமிழக- கேரள எல்லையான தென்காசி மாவட்டம் புளியரை அருகே தேர்தல் பறக்கும் படை அலுவலர் அரசப்பன் தலைமையில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கேரளாவில் இருந்து வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்த ரூ.1 லட்சத்து 48 ஆயிரத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். மேலும் மற்றொரு வாகனத்தில் சோதனை செய்த போது அனுமதியின்றி ரூ.65 ஆயிரம் எடுத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் சுரண்டை அருகே உள்ள இடையர்தவணை விலக்கு பகுதியில் பறக்கும் படை அலுவலர் உமாதேவி தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் வந்தவர்கள் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1 லட்சத்து 24 ஆயிரம் கொண்டு சென்றனர். இதை அதிகாரிகள் பறிமுதல் செய்து, வீரகேரளம்புதூர் தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

Next Story