திருச்சியில் வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலி
திருச்சியில் வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலியாகினர்.
மலைக்கோட்டை
திருச்சி இ.பி. ரோடு நன்றுடையான் கோவில் பகுதியில் நேற்று காலை காவிரி ஆற்றில் குளித்துவிட்டு சைக்கிளில் சென்ற சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் மீது பின்னால் வந்த கண்டெய்னர் லாரி மோதியது. இதில் தடுமாறி கீழே விழுந்த அவர் மீது லாரியின் இடது பின்பக்க டயர் ஏறி இறங்கியதில் கால் நசுங்கி சம்பவ இடத்திலேயே முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருச்சி டவுன் கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணபிரியா கொடுத்த புகாரின்பேரில், வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, இறந்தவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் முதியவர் மீது மோதிய லாரியின் டிரைவர் பீகார் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னராய்(வயது 29) என்பவரை கைது செய்தனர்.
இதேபோல் கீழதேவதானம் பகுதியை சேர்ந்த ராஜா என்ற மணிமுருகன்(29), அவரது நண்பர் ஸ்ரீதரன் என்பவருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் நேற்று மாலை திருச்சியில் இருந்து சமயபுரம் நோக்கி சென்றார். கொள்ளிடம் மேம்பாலம் பகுதியில் சென்றபோது அவர்களுக்கு முன்னால் சென்ற சரக்கு ஆட்டோவிற்கு வெளியே நீட்டிக் கொண்டிருந்த கம்பியில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் மணிமுருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின்பேரில் வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் அங்கு சென்று, மணிமுருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story