வாகன சோதனையில் ரூ.51 ஆயிரம் பறிமுதல்


வாகன சோதனையில் ரூ.51 ஆயிரம் பறிமுதல்
x
தினத்தந்தி 23 March 2021 2:40 AM IST (Updated: 23 March 2021 2:40 AM IST)
t-max-icont-min-icon

வாகன சோதனையில் ரூ.51 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

காட்டுப்புத்தூர்
முசிறி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தொட்டியம் அருகே உள்ள ஏலூர்பட்டியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையில் வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோ ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது உரிய ஆவணமின்றி தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறை அடுத்த செந்தாழை கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் (வயது 41) கொண்டு வந்த ரூ.50 ஆயிரத்து 850 பறிமுதல் செய்யப்பட்டு முசிறி சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.


Next Story