ஆஸ்தான மண்டபத்தில் நம்பெருமாள் எழுந்தருளல்


ஆஸ்தான மண்டபத்தில் நம்பெருமாள் எழுந்தருளல்
x
தினத்தந்தி 23 March 2021 2:58 AM IST (Updated: 23 March 2021 2:58 AM IST)
t-max-icont-min-icon

ஆஸ்தான மண்டபத்தில் நம்பெருமாள் எழுந்தருளினார்

ஜீயபுரம்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பங்குனி தேர்த்திருவிழா கடந்த 20-ந் தேதி தொடங்கியது. திருவிழாவின் இரண்டாம் நாளன்று இரவு நம்பெருமாள் பல்லக்கில் புறப்பாடாகி காவிரி ஆற்றின் வழியாக சென்று ஜீயபுரத்தில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் நம்பெருமாள் பல்லக்கில் புறப்பாடாகி நேற்று அதிகாலை 2 மணி அளவில் ஜீயபுரம் ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளினார். நேற்று காலை நம்பெருமாளுக்கு ஆஸ்தான மண்டபத்தில் தயிர் சாதமும், மாவடுவும் படைத்தனர். மேலும் சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர். அதைத்தொடர்ந்து நம்பெருமாள் அந்தநல்லூர், அம்மன்குடி, திருச்செந்துறை போன்ற பகுதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் மதியம் மீண்டும் ஆஸ்தான மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள் எழுந்தருளினார். இந்த விழாவில் ஜீயபுரம் பகுதியை சுற்றியுள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்றனர். பின்னர் மாலை நேரத்தில் பல்லக்கில் புறப்பாடான நம்பெருமாள் காவிரி ஆற்றின் வழியாக  ஸ்ரீரங்கம் கோவிலை அடைந்தார்.


Next Story