சேலத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு வாகன பிரசாரம்


சேலத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு வாகன பிரசாரம்
x
தினத்தந்தி 23 March 2021 4:16 AM IST (Updated: 23 March 2021 4:16 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு வாகன பிரசாரம் தொடங்கியது.

சேலம்:
சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாநகராட்சி சார்பில் வீடியோ விழிப்புணர்வு பிரசார வாகனம் தொடங்கப்பட்டுள்ளது. அம்மாபேட்டை மண்டல அலுவலக வளாகத்தில் இந்த விழிப்புணர்வு பிரசார வாகனத்தை மாநகராட்சி ஆணையாளரும், தெற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான ரவிச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஜனநாயகத்திற்கு அடிப்படையாக திகழ்வது வாக்குரிமை. வாக்களிப்பது அனைத்து குடிமக்களின் அடிப்படை உரிமையாகும். இளம் வாக்காளர் உள்பட அனைத்து வாக்காளர்களும் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி வீடியோ வாகனம் மூலம் பிரசாரம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பிரசார வாகனம் மூலம் சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு வீடியோ திரையிடப்படும் என மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில், மாநகர பொறியாளர் அசோகன், உதவி ஆணையாளர்கள் ரமேஷ்பாபு, மருதபாபு, உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி வருவாய் அலுவலர் பார்த்தசாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story