பறக்கும் படை, கண்காணிப்பு குழு எண்ணிக்கை அதிகரிப்பு


பறக்கும் படை, கண்காணிப்பு குழு எண்ணிக்கை அதிகரிப்பு
x
தினத்தந்தி 23 March 2021 4:19 AM IST (Updated: 23 March 2021 4:40 AM IST)
t-max-icont-min-icon

பறக்கும் படை, கண்காணிப்பு குழு எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய பணம் எடுத்து செல்லப்படுகிறதா, பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என்று பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தி கண்காணித்து வருகின்றனர். உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் எடுத்து சென்றால் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. 

கேரளா, கர்நாடகா மாநில எல்லையையொட்டி நீலகிரி அமைந்து உள்ளதால் தேர்தல் ஆணைய உத்தரவின்படி பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழு எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளது. முதலில் ஊட்டி, கூடலூர், குன்னூர் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் தலா 3 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு இருந்தது. தற்போது தொகுதிக்கு தலா 6 பறக்கும் படை என அதிகரிக்கப்பட்டு உள்ளது. ஒரே நேரத்தில் 3 பறக்கும் படை குழுவினர் வாகன சோதனை நடத்துகின்றனர்.

ஊட்டி-குன்னூர் சாலையில் லவ்டேல் சந்திப்பு பகுதியில் 2 குழுவினர் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையும், இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரையும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். மேலும் நிலையான கண்காணிப்பு குழுவும் அதிகரிக்கப்பட்டு, ஒரே நேரத்தில் ஒரு தொகுதியில் தலா 7 நிலையான கண்காணிப்பு குழுவினர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story