மல்லூர் அருகே கன்டெய்னர் லாரி மோதி தறித்தொழிலாளி பலி
மல்லூர் அருகே கன்டெய்னர் லாரி மோதி தறித்தொழிலாளி பலியானார்.
பனமரத்துப்பட்டி:
மல்லூர் அருகே அம்மாபாளையம் கிராமம் காட்டூர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 45), தறித்தொழிலாளி. மல்லூர் ஏர்வாடி கிராமத்தை சேர்ந்தவர் அம்மாசி (60). இவர்கள் இருவரும் நேற்று காலை 8 மணியளவில் மல்லூர் செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
சந்தியூர்பிரிவு பஸ் நிறுத்தத்தில், சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளனர். அப்போது சேலத்தில் இருந்து நாமக்கல் நோக்கி சென்ற கன்டெய்னர் லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சுந்தரம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயமடைந்த அம்மாசியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த மல்லூர் போலீசார் இறந்துபோன சுந்தரத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story