சேலத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல்-2 வாலிபர்கள் கைது


சேலத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல்-2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 23 March 2021 4:46 AM IST (Updated: 23 March 2021 4:46 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலைமிரட்டல் விடுத்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

சேலம்:
சேலத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலைமிரட்டல் விடுத்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்
சேலம் அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ராஜேந்திரன். இவர் நேற்று முன்தினம் திருச்சி கிளை ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது அங்கு 2 வாலிபர்கள் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நின்று கொண்டு சிகரெட் பிடித்து கொண்டிருந்தனர்.
இதை பார்த்த சப்-இன்ஸ்பெக்டர் அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு கூறினார். ஆனால் அதற்கு அந்த வாலிபர்கள் மறுப்பு தெரிவித்ததுடன் சப்-இன்ஸ்பெக்டரை திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
2 பேர் கைது
போலீசார் விசாரணையில், அந்த வாலிபர்கள் சேலம் லைன்மேடு பகுதியை சேர்ந்த கார்த்தி (வயது 29), தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்த குமார் (30) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Next Story