அடையாள அட்டை இல்லாவிட்டாலும் 11 ஆவணங்களை காண்பித்து வாக்களிக்கலாம்


அடையாள அட்டை இல்லாவிட்டாலும் 11 ஆவணங்களை காண்பித்து வாக்களிக்கலாம்
x
தினத்தந்தி 23 March 2021 4:52 AM IST (Updated: 23 March 2021 4:52 AM IST)
t-max-icont-min-icon

வாக்குப்பதிவின்போது வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் 11 ஆவணங்களை காண்பித்து வாக்களிக்கலாம் என்று திருப்பூர் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர்
வாக்குப்பதிவின்போது வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் 11 ஆவணங்களை காண்பித்து வாக்களிக்கலாம் என்று திருப்பூர் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
வங்கி கணக்கு புத்தகம்
திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட 8 சட்டமன்ற தொகுதிகளிலும் வருகிற 6 ந் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவின்போது வாக்காளர்கள் அனைவரும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையை காண்பித்து வாக்களிக்க வேண்டும். வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை அளிக்க முடியாத வாக்காளர்கள் மாற்று புகைப்பட அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை வாக்குச்சாவடியில் காண்பித்து வாக்களிக்கலாம்.
அதன்படி ஆதார் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் பணி அட்டை, வங்கி அல்லது அஞ்சலக கணக்கு புத்தகங்கள் புகைப்படத்துடன் கூடியது, தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை, ஓட்டுனர் உரிமம், நிரந்தர கணக்கு எண் அட்டை பான் கார்டு, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை, இந்திய கடவுச்சீட்டு பாஸ்போர்ட் ஆகியவற்றை காண்பித்து வாக்களிக்கலாம்.
ஓய்வூதிய ஆவணம்
புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதியம் ஆவணம், மத்திய, மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்கள் ஆகியவற்றால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள், நாடாளுமன்ற, சட்டமன்ற, சட்டமேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம்.
இந்த தகவலை திருப்பூர் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Next Story