சேலம் மேம்பாலத்தில் பழுதாகி நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி டிரைவர் பலி


சேலம் மேம்பாலத்தில் பழுதாகி நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி டிரைவர் பலி
x
தினத்தந்தி 23 March 2021 4:54 AM IST (Updated: 23 March 2021 4:54 AM IST)
t-max-icont-min-icon

சேலம் சீலநாயக்கன்பட்டி மேம்பாலத்தில் பழுதாகி நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் டிரைவர் பலியானார்.

சேலம்:
சேலம் சீலநாயக்கன்பட்டி மேம்பாலத்தில் பழுதாகி நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் டிரைவர் பலியானார்.
டிரைவர்
சேலம் உடையாப்பட்டி அருகே உள்ள காட்டுவட்டம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 34). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் கார் டிரைவராக பணியாற்றி வந்தார். 
இந்தநிலையில் வெங்கடேஷ் நேற்று முன்தினம் இரவு கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள உறவினர் ஒருவருடைய வீட்டுக்கு சென்றார். பின்னர் அவர் அங்கிருந்து நேற்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். இதனிடையே பெருந்துறையில் இருந்து சின்னசேலத்துக்கு இரும்பு கம்பி லோடு ஏற்றி வந்த லாரி ஒன்று சீலநாயக்கன்பட்டி மேம்பாலத்தில் பழுதாகி நின்றது. அப்போது மேம்பாலத்தில் வந்த வெங்கடேசின் மோட்டார் சைக்கிள் அந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
பரிதாப சாவு
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த வெங்கடேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அன்னதானப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் வெங்கடேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விபத்தில் பலியான வெங்கடேசுக்கு மணிமேகலை என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

Next Story