மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி இருப்பு குறித்து சுகாதாரத்துறை கூடுதல் இயக்குனர் ஆய்வு
திருப்பூர் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி எவ்வளவு இருப்பு உள்ளது என்பது குறித்து சுகாதாரத்துறை கூடுதல் இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பூர்
திருப்பூர் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி எவ்வளவு இருப்பு உள்ளது என்பது குறித்து சுகாதாரத்துறை கூடுதல் இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார்.
கொரோனா தடுப்பூசி
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி சென்னையில் இருந்து 20 ஆயிரம் டோசுக்கு மேல் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் 5 ஆயிரம் டோசுக்கு அதிகமாகவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு பகுதிகளுக்கும் தடுப்பூசி மருந்து பிரித்து அனுப்பப்பட்டு விட்டன.
திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, அவினாசி, தாராபுரம் உள்பட 8 அரசு மருத்துவமனைகள் மற்றும் திருப்பூர் அரசு தலைமை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதுபோல் 13 ஆரம்ப சுகாதார நிலையம், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கூடுதல் இயக்குனர் ஆய்வு
இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 வயது முதல் 60 வயது வரை இணைநோய் உள்ளவர்களை விரைவாக தடுப்பூசி போட வருமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது. இதுபோல் பொதுமக்களுக்கு தடுப்பூசி சரியாக செலுத்தப்படுகிறதா தட்டுப்பாடின்றி அனைத்து ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி இருப்பு இருக்கிறதா, கொரோனா முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
அதன்படி திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் நம்பியாம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம், டி.எஸ்.கே. ஆரம்ப சுகாதார நிலையம் என அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நேற்று ஆய்வு நடந்தது. இதில் பொது சுகாதாரத்துறை கூடுதல் இயக்குனர் வடிவேலன், சுகாதாரத்துறை மாவட்ட துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார், டாக்டர் ஜெயப்பிரியா, மாநகர் நல அதிகாரி பிரதீப் வாசுதேவன் கிருஷ்ணகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து பல்வேறு அறிவுரைகளையும் வழங்கினர்.
Related Tags :
Next Story