சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு முதியவர் பலி- மேலும் 35 பேருக்கு தொற்று உறுதி


சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு முதியவர் பலி- மேலும் 35 பேருக்கு தொற்று உறுதி
x
தினத்தந்தி 23 March 2021 5:18 AM IST (Updated: 23 March 2021 5:18 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு முதியவர் பலியானார். மேலும் 35 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சேலம்:
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு முதியவர் பலியானார். மேலும் 35 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 27 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று அதிகரித்து 35 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதாவது, சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 14 பேர், ஆத்தூரில் 4 பேர், எடப்பாடி, நங்கவள்ளி, மேட்டூர் ஆகிய பகுதிகளில் தலா 3 பேர், கெங்கவல்லி, பெத்தநாயக்கன்பாளையம், நரசிங்கபுரம் ஆகிய பகுதிகளில் தலா 2 பேர், மேச்சேரி, வீரபாண்டி ஆகிய பகுதிகளில் தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
முதியவர் பலி
இவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 85 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 15 பேர் குணமடைந்துவிட்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மேலும் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு 177 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே நீண்ட நாட்களுக்கு பிறகு கொரோனாவுக்கு ஒருவர் பலியாகி உள்ளார். அதாவது, சேலத்தை சேர்ந்த 70 வயதுடைய முதியவர் ஒருவர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி நேற்று தனியார் ஆஸ்பத்திரியில் பலியாகி உள்ளார். 

Next Story