பெரம்பலூரில் 2 பேருக்கு கொரோனா தொற்று
பெரம்பலூரில் 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் 2 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 300 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஏற்கனவே 21 பேர் உயிரிழந்துள்ளனர். 2 ஆயிரத்து 271 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 8 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் பெரம்பலூர்- எளம்பலூர் சாலையில் ஒரே வீட்டில் ஆசிரிய தம்பதி, அவர்களது மகன் என 3 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வீட்டின் முன்பு தடை செய்யப்பட்ட பகுதி என்று சுகாதாரத்துறையினரால் தடுப்பு கம்பிகளில் எச்சரிக்கை பதாகை தொங்கவிடப்பட்டுள்ளது.
மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் 446 பேருக்கும் கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.
Related Tags :
Next Story