சேலம் சரகத்தில் 3,789 துப்பாக்கிகள் ஒப்படைப்பு
சேலம் சரகத்தில் 3 ஆயிரத்து 789 துப்பாக்கிகள் போலீஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
சேலம்:
சேலம் சரகத்தில் 3 ஆயிரத்து 789 துப்பாக்கிகள் போலீஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் நடத்தை விதிகள்
தமிழக சட்டசபை பொதுத்தேர்தல் வருகிற 6-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. தேர்தல் நேரங்களில் கைத்துப்பாக்கி மற்றும் நாட்டுத்துப்பாக்கிகளை வைத்திருக்க கூடாது என்பது நடத்தை விதிகளில் ஒன்றாகும்.
இதனால் துப்பாக்கி வைத்திருப்பவர்கள் அதனை அருகில் உள்ள போலீஸ் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. வங்கி பாதுகாப்பு உள்ளிட்ட சிலருக்கு மட்டும் துப்பாக்கிகள் ஒப்படைப்பதில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
3,789 துப்பாக்கிகள் ஒப்படைப்பு
இந்த நிலையில் சேலம் சரகமான சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் இதுவரை 3,789 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 1,912 பேர் துப்பாக்கி வைத்துள்ளனர். ஆனால் இதுவரை 1,892 பேர் துப்பாக்கிகளை போலீஸ் நிலையங்களில் ஒப்படைத்த்ள்ளனர். இதில் விதிவிலக்கு பெற்றவர்கள் தவிர மற்றவர்கள் உடனடியாக துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இதேபோல் நாமக்கல் மாவட்டத்தில் 982 பேரும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 470 பேரும், தர்மபுரி மாவட்டத்தில் 445 பேரும் துப்பாக்கிகளை சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் ஒப்படைத்து உள்ளனர். மற்றவர்கள் துப்பாக்கிகளை உடனடியாக ஒப்படைக்க அந்தந்த மாவட்ட போலீஸ் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
Related Tags :
Next Story