பாப்பிரெட்டிப்பட்டி அருகே, டிராக்டர் மீது சரக்கு வேன் மோதல்; பெண்கள் உள்பட 5 பேர் படுகாயம்
பாப்பிரெட்டிப்பட்டி அருகே டிராக்டர் மீது சரக்கு வேன் மோதியதில் பெண்கள் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
பொம்மிடி,
தர்மபுரி மாவட்டம் ஒடசல்பட்டி கூட்ரோடு பகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று பிரசாரம் செய்தார். இதில் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள சாமியாபுரம் அண்ணா நகர் மற்றும் குமரக்கோட்டம் பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் சரக்கு வேனில் சென்று விட்டு மீண்டும் ஊர் திரும்பி கொண்டு இருந்தனர்.
கோபாலபுரம் கூட்டுறவு சர்க்கரை ஆலை அருகே வந்தபோது எதிரில் வந்த டிராக்டர் மீது சரக்கு வேன் மோதியது. இதில் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த ஜீவா, சந்திரா, ராஜேந்திரன், தங்கராஜ் உள்ளிட்ட 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் ஜீவாவுக்கு கை துண்டானது. இவர்கள் 5 பேரும் சேலம், தர்மபுரி மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து ஏ.பள்ளிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story