சிவகாசி அ.தி.மு.க வேட்பாளர் லட்சுமிகணேசன், பாதிரியாரிடம் ஆசி பெற்றார்


சிவகாசி அ.தி.மு.க வேட்பாளர் லட்சுமிகணேசன், பாதிரியாரிடம் ஆசி பெற்றார்
x
தினத்தந்தி 23 March 2021 8:36 AM IST (Updated: 23 March 2021 8:36 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசி அ.தி.மு.க வேட்பாளர் லட்சுமிகணேசன் தூய லூர்து அன்னை ஆலயத்துக்கு சென்று பாதிரியாரை சந்தித்து ஆசி பெற்றார்.

சிவகாசி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டி யிடும் வெற்றி வேட்பாளர் லட்சுமிகணேசன் கடந்த ஒரு வாரமாக தொகுதி முழுவதும் பல்வேறு பகுதியில் சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார். குறிப்பாக சமுதாய தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொழிலதிபர்கள், தொழிலாளர்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் எம்.ஜி.ஆர்.காலனி, நேரு காலனி, சேனையாபுரம் காலனி, முத்துராமலிங்கபுரம் காலனி பகுதியில் வீடு, வீடாக சென்று தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட் டார். 

தொடர்ந்து பள்ளப்பட்டி பகுதியில் வசிக்கும் முக்கிய பிரமுகர்கள் மற்றும் சமுதாய தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். பின்னர் காமராஜர்புரம் காலனிக்கு சென்று அங்குள்ள வாக்காளர்களிடம் இரட்டை இலை சின்னத்துக்கு வெற்றி வேட்பாளர் லட்சுமிகணேசன் வாக்கு கேட்டார். அப்போது பகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்கள் மற்றும் சமுதாய தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர். பின்னர் சாமிபுரம் காலனி, மீனாட்சி காலனி பகுதியில் வாக்கு வேட்டையாடினார். 

பின்னர் சிவகாசியில் உள்ள தூய லூர்து அன்னை ஆலயத்துக்கு சென்று பாதிரியாரை சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் சிவகாசி நகராட்சி அலுவலகம் அருகில் உள்ள காமராஜர் சிலை அருகில் பிரசாரம் செய்தார். அப்போது சிவகாசி தொகுதிக்கு மேலும் பல நல்ல திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்த வாக்காளர்கள் அனைவரும் இரட்டை இலை சின்னத்தில் எனக்கு வாக்களிக்க வேண்டும் என்றார். பின்னர் ஐயப்பன் காலனி பகுதியில் வாக்கு சேகரித்தார். 

அங்கிருந்து தட்டாவூரணிக்கு சென்ற அ.தி.மு.க. வெற்றி வேட்பாளர் லட்சுமிகணேசன் அங்குள்ள பெரியவர்களிடம் ஆசி பெற்று தனக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார். நடராஜா காலனி பகுதிக்கு வாக்கு கேட்க சென்ற வேட்பாளர் லட்சுமி கணேசனுக்கு அப்பகுதி மக்கள் மலர்தூவி வரவேற்றனர். பின்னர் மணிநகர் பகுதியில் திறந்த ஜீப்பில் நின்றபடி வாக்குசேகரித்தார். அங்கிருந்து பஸ் நிலையம் வரும் வழியில் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் சாலையின் இருபுறங்களிலும் நின்று வேட்பாளர் லட்சுமி கணேசனை வரவேற்றனர். 

பின்னர் பஸ் நிலையம் அருகில் பொதுமக்கள் முன்பு பேசினார். அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து திட்டங்களையும் சிவகாசி தொகுதி மக்கள் பெற அனைவரும் இரட்டைஇலை சின்னத்தில் வாக்களித்து என்னை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அப்போது கூடி இருந்த மக்கள் வாழ்த்து கோஷம் எழுப்பினர். பின்னர் அங்கிருந்து சிவகாசி பாரதிநகர் பகுதியில் பிரசாரம் செய்தார். விருதுநகர் ரோட்டில் திறந்த ஜீப்பில் சென்ற வெற்றி வேட்பாளர் லட்சுமிகணேசன் இரட்டை விரலை காட்டியபடி இரட்டைஇலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். 

பின்னர் புதுத்தெருவில் கூடி இருந்த வாக்காளர்கள் மத்தியில் அ.தி.மு.க.வுக்கு வாக்கு சேகரித்தார். அங்கிருந்து அம்பேத்கர் சிலை வழியாக வேலாயுத ரஸ்தாவுக்கு சென்றார். வெற்றி வேட்பாளர் லட்சுமி கணேசனுடன் அ.தி.மு.க. நிர்வாகிகள் அசன்பதுருதீன், பலராம். வேண்டுராயபுரம்சுப்பிரமணியம், பொன்சக்திவேல், புதுப்பட்டி கருப்பாசமி, ஆரோக்கியம், ரீட்டா ஆரோக்கியம், சுடர்வள்ளி சசிக்குமார், பிலிப்வாசு, நாரணாபுரம் மகேஸ்வரி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story