கொல்லிமலை, புளியஞ்சோலை உபரிநீர் மகாதேவி ஏரிக்கு கொண்டு வரப்படும் - முசிறி அ.தி.மு.க. வேட்பாளர் செல்வராசு உறுதி
கொல்லிமலை, புளியஞ்சோலை உபரிநீர் மகாதேவி ஏரிக்கு கொண்டு வரப்படும் என முசிறி அ.தி.மு.க. வேட்பாளர் செல்வராசு உறுதியளித்தார்.
முசிறி,
முசிறி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரும், அம்மா பேரவை மாநில இணைச் செயலாளருமான எம்.செல்வராசு எம்.எல்.ஏ. நேற்று தா.பேட்டை ஒன்றியத்தில் உள்ள மாவலிப்பட்டி, பைத்தம்பாறை, வலை யெடுப்பு, கிருஷ்ணாபுரம், தேவானூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வெயிலையும் பொருட் படுத்தாமல் சுற்றுப்பயணம் செய்து இரட்டைஇலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசும்போது,
கடந்த 2016-ல் ஜெயலலிதா முதல்-அமைச் சராக பொறுப்பேற்றதும் முதல் கையெழுத்து போட்டு விவசாய கடன்களை தள்ளுபடி செய்தார். தற்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விவசாயகடன், மகளிர் சுயஉதவி குழு கடன்களை தள்ளுபடி செய்து அறிவித்துள்ளார். ஒரே ஆட்சியில் இரண்டு முறை விவசாய கடன் தள்ளுபடி செய்தது. அ.தி.மு.க அரசுதான். நமது பகுதி மிகவும் வறட்சியானது. கொல்லிமலை புளியஞ் சோலை உபரிநீர் கால்வாய் மூலம் மகாதேவி ஏரிக்கு கொண்டு வரப்படும். கடந்த 5 ஆண்டுகளில் முசிறி தொகுதியில் பல திட்டங்கள் செயல்படுத்தபட்டுள்ளது.
தமிழக முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி மீண்டும் பொறுப்பேற்று நல்லாட்சி தொடர நீங்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும். அ.தி.மு.க. வெற்றி பெற்றவுடன் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி குடும்ப பெண்களுக்கு மாதம் ரூ.1,500 அவரது வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, மகப்பேறு நிதியுதவி ரூ.21 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று பேசினார்.
எம்.எல்.ஏ விற்கு செல்லும் இடங்களில் எல்லாம் பெண்கள் உற்சாகமாக ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். பிரசாரத்தின் போது முன்னாள் அமைச்சர்கள் என்.ஆர்.சிவபதி, அண்ணாவி, வடக்கு மாவட்ட அவைத்தலைவர் பிரின்ஸ் எம்.தங்கவேல், முன்னாள் மாவட்ட செயலாளர் சுப்பு என்கிற சுப்ரமணியன், மாவட்ட கவுன்சிலர் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் ஆர்.ஜெயம், எஸ்.குமரவேல், முன்னாள் ஒன்றியக் குழு தலைவர் செங்கமலை, நிர் வாகிகள் தங்கதமிழ்ச்செல்வன், மாசிலாமணி சரவணன், ஜெயசீலன், கார்த்திக், பாரதி ராஜா, மகாராஜன், நடராஜன் மற்றும் கூட்டணி கட்சியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story