வீட்டிற்கு ஒருவருக்கு அரசு வேலை கிடைத்திட அ.தி.மு.க.வை ஆதரியுங்கள் - துறையூர் வேட்பாளர் இந்திராகாந்தி தேர்தல் பிரசாரம்
வீட்டிற்கு ஒருவருக்கு அரசு வேலை கிடைத்திட அ.தி.மு.க.வை ஆதரியுங்கள் என துறையூர் வேட்பாளர் இந்திராகாந்தி தேர்தல் பிரசாரம் செய்தார்.
துறையூர்,
திருச்சி மாவட்டம், துறையூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் இந்திராகாந்தி துறையூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களான முருகூர், கொட்டையூர், கருப்பம்பட்டி, சங்கம்பட்டி, வி.ஏ.சமுத்திரம், காவேரிப்பட்டி, கலிங்கப்பட்டி வெங்கடேசபுரம், மாறாடி, ஒக்கரை, கிருஷ்ணாபுரம், கோட்டப்பாளையம், வைரிசெட்டிபாளையம், பி.மேட்டூர், ஏரிக்காடு உள்பட பல்வேறு கிராமங்களில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார்.அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்தும், பூரண கும்ப மரியாதை கொடுத்தும் வரவேற்றனர்.
அப்போது வாக்காளர்கள் மத்தியில் இந்திராகாந்தி பேசியதாவது:- அ.தி.மு.க. வெற்றி பெற்றால் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி நலத் திட்டங்களான வீட்டிற்கு ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
மாணவ-மாணவிகளுக்கு கல்விக் கடன் ரத்து செய்யப்படும். இல்லத்தரசிகளுக்கு வாஷிங் மெஷினும், வீடு தேடி ரேஷன் பொருட்களும் கிடைக்கும். தாலிக்கு தங்கம், முதியோர்களின் ஓய்வு தொகை ரூ.2 ஆயிரமாக கிடைக்கும். இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,500 கிடைத்திட, பொங்கல் பரிசு ெதாகுப்பு ெதாடர்ந்திட எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
பிரசாரத்தின்போது உப்பிலியபுரம் ஒன்றிய செயலாளர் அழகாபுரி செல்வராஜ் மற்றும் ராம்மோகன், துறையூர் வடக்கு ஒன்றிய செயலாளர் சேனை செல்வம், தெற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், பேரூராட்சி கழக செயலாளர் ராஜேந்திரன், உப்பிலியபுரம் நகர செயலாளர் ராஜாங்கம், மாவட்ட விவசாய அணி செயலாளர் பொன் காமராஜ், முன்னாள் அரசு வழக்கறிஞர் செந்தில் குமார், வழக்கறிஞர் அத்தியப்பன், முன்னாள் யூனியன் தலைவர் மனோகரன் மற்றும் கூட்டணி கட்சியினர், தொண்டர்கள் உடன் சென்று வாக்கு சேகரித்தனர்.
Related Tags :
Next Story