தி.மு.க. பொய் பிரசாரத்தை மக்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை - பா.ஜ.க. வேட்பாளர் கே.அண்ணாமலை பேச்சு


தி.மு.க. பொய் பிரசாரத்தை மக்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை - பா.ஜ.க. வேட்பாளர் கே.அண்ணாமலை பேச்சு
x
தினத்தந்தி 23 March 2021 9:59 AM IST (Updated: 23 March 2021 9:59 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. பொய் பிரசாரத்தை மக்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என பா.ஜ.க. வேட்பாளர் கே.அண்ணாமலை பேசினார்.

அரவக்குறிச்சி, 

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி பா.ஜ.க. வேட்பாளர் கே.அண்ணாமலை அரவக்குறிச்சி மேற்கு ஒன்றியத்தில் செல்லிவலசு, குறிகாரன்வலசு, குரும்பப்பட்டி, ஆண்டிபட்டிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். 

அப்போது அவர் பொதுமக்கள் முன்னிலையில் பேசியதாவது: தி.மு.க.வினர் கூறும் எந்த பொய் பிரசாரத்தையும் மக்கள் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை. அ.தி.மு.க., பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் மிகப்பெரிய மெஜாரிட்டியுடன் வெற்றி பெறுவது உறுதி. அந்த அளவிற்கு மத்திய அரசில் பிரதமர் மோடியும், மாநில அரசில் முன்னாள் முதல்அமைச்சர் ஜெயலலிதாவின் ஆசிபெற்ற முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் ஏழை எளியோர்களுக்கு பல நல்ல திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி காட்டி உள்ளனர். 

அரவக்குறிச்சி வறட்சியான பகுதி ஆகும். மத்திய, மாநில அரசுகளிடம் நிதி பெற்று அரவக்குறிச்சி தொகுதியில் நீர் மேலாண்மையை உயர்த்த பாடுபடுவேன். மேலும் இந்த பகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றுவேன்.
இவ்வாறு அவர் பேசினார். 
வாக்குசேகரிப்பின்போது, அ.தி.மு.க., பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story