நான் வெற்றி பெற்று மக்களோடு மக்களாக இணைந்து பணியாற்றுவேன் - பிரசாரத்தின் போது அ.தி.மு.க. வேட்பாளர் லோகிராஜன் பேச்சு
நடைபெறவுள்ள தேர்தலில் நான் வெற்றி பெற்று மக்களின் பிரச்சினை களுக்கு மக்களோடு மக்களாக இணைந்து பணியாற்றுவேன் என்று அ.தி.மு.க வேட்பாளர் லோகிராஜன் பிரசாரத்தின் போது பேசினார்.
ஆண்டிப்பட்டி,
தேனி மாவட்டம், கடமலை-மயிலை ஒன்றியம் பொன்னம் மாள்பட்டி, கண்டமனூர், ஆத்தங்கரைபட்டி, பாலூத்து, கடமலைக்குண்டு உள்ளிட்ட கிராமங்களில் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி அ.தி. மு.க வேட்பாளர் ஏ.லோகி ராஜன் நேற்று தேர்தல் பிரசாரம் செய்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அனைத்து கிராமங்களிலும் கட்சியினர் பட்டாசு வெடித்தும், பெண்கள் ஆரத்தி எடுத்தும் லோகிராஜனை வரவேற்றனர். பிரசாரத்தின் போது லோகிராஜன் பேசியதாவது:-
கடந்த 10 ஆண்டுகள் அ.தி.மு.க அரசு ஏராளமான நலத்திட்டங்களை செயல் படுத்தியுள்ளது. மேலும் விவசாயம் மற்றும் நகை கடன்கள் தள்ளுபடி செய்யப் பட்டுள்ளது. தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிவித்து அதனை முறையாக செயல்படுத்தி வருவதால் பொதுமக்கள் அ.தி.மு.க ஆட்சியே மீண்டும் தொடர வேண்டும் என்ற மனநிலையில் உள்ளனர்.
இதேபோல திருமண நிதி உதவி 35 ஆயிரம், முதியோர் உதவித் தொகை 2 ஆயிரம், இலவச வாஷிங்மெஷின் உள்ளிட்ட ஏராளமான திட் டங்கள் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் தேர்தல் அறிக்கையில் கூறப் பட்டுள்ள அனைத்து வாக் குறுதிகளும் உறுதியாக நிறை வேற்றப்படும். பருவநிலை மாற்றம் காரணமாக மூல வைகை ஆறு வருடத்தின் பெரும்பாலான மாதம் வறண்ட நிலையில் காணப் படுகிறது. எனவே தொடர்ந்து ஏற்பட்டு வரும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க 163 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வைகை ஆற்றிலிருந்து குடிநீர் எடுத்து அதனை சுத்திகரித்து பொதுமக்களுக்கு வழங்க மாண்புமிகு துணை முதல்& அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார்.
ஆனால் இந்த திட்டம் வருவதற்கு கடுமையாக பாடு பட்டதாக ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி தி.மு.க வேட்பாளர் பொதுமக்களி டையே தொடர்ந்து பொய் பிரசாரத்தில் ஈடுபட்டு வரு கிறார். இதேபோல துணை முதல்&அமைச்சர் லோயர் கேம்ப்பில் இருந்து குழாய்கள் மூலம் தேனி மாவட்டத்தில் உள்ள கண்மாய்களில் நீர் நிரப்பும் புதிய திட்டத்தை அறிவித்துள்ளார். இந்தத் திட்டம் விவசாயிகள் மத்தி யில் பெரும் வரவேற்பை பெற் றுள்ளது. இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதாக உறுதி யளித்ததை தொடர்ந்து தமிழக மலர் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஆண்டிப் பட்டியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் எனக்கு ஆதரவு அளிப்பதாக தெரி வித்துள்ளனர்.
நான் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆண்டிப்பட்டி ஒன்றியக்குழு தலைவராக பணியாற்றி வருகிறேன். ஆண்டிபட்டி ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சிப்பணி களை மேற் கொண்டுள்ளேன். எனவே நடைபெறவுள்ள தேர்தலில் எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யும் பட்சத்தில் கடமலை&மயிலை ஒன்றியத்தில் அனைத்து கிராமங்களிலும் அடிப்படை வசதிகளை மேம் படுத்த பாடுபடுவேன். மேலும் குறிப்பிட்ட நாட் களுக்கு ஒருமுறை கிராமங் களுக்கு நேரில் வந்து பொது மக்களிடம் கோரிக்கைகளை கேட்டு அதனை உடனடியாக நிறைவேற்றுவேன்.
நான் வெற்றி பெற்று மக்களின் பிரச்சினைகளுக்கு மக்களோடு மக்களாக இணைந்து பணியாற்றுவேன் என்றும், அதிக மதிப்பெண் பெற்ற ஏழை எளிய மாணவர்களுக்கு கல்லூரி படிப்பிற்கான செலவுகளை தாமே ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார். பிரசாரத்தின் போது ஆத்தாங்கரைபட்டி கிராமத்தில் பெண் ஒருவர் தனது ஆண் குழந்தைக்கு பெயர் சூட்டுமாறு லோகி ராஜனிடம் கேட்டுக் கொண்டார். இதனையடுத்து பிரசார வேனில் இருந்து இறங்கி வந்த லோகிராஜன் குழந்தையை கையில் தூக்கி ராமச்சந்திரன் என பெயர் சூட்டினார். இந்த பிரசாரத் தின் போது அ.தி.மு.க. தேனி மாவட்ட துணை செயலாளர் முருக் கோடைராமர், ஆண்டிப்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் டி.ஆர். என். வரதராஜன், கடமலை&மயிலை ஒன்றிய செயலாளர் கள் ஏ.கொத்தாளமுத்து, வி.எஸ். தர்மராஜ், அரசு வழக் கறிஞர் டி.கே.ஆர்.கணேசன், ஆண்டிப்பட்டி ஒன்றிய துணைச்செயலாளர் அமரே சன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் பொன்முருகன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story