4 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தை கலெக்டர் ஆய்வு


4 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 23 March 2021 4:57 PM IST (Updated: 23 March 2021 4:57 PM IST)
t-max-icont-min-icon

4 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தை கலெக்டர் சந்தீப்நந்தூரி ஆய்வு செய்தார்.

ஆரணி

ஆரணியை அடுத்த தச்சூர் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் ஆரணி, செய்யாறு, வந்தவாசி மற்றும் போளூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையமாக தேர்வு செய்யப்பட்டு, அங்கு அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் வாக்கு எண்ணும் மையத்தை கலெக்டர் சந்தீப்நந்தூரி, தேர்தல் பார்வையாளர்கள் பிரபாகரன், கமலேஷ்ஸ்வர பிரசாத்சிங், அஜய்குமார் சவுத்திரி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

பின்னர் கலெக்டர் சந்தீப்நந்தூரி நிருபர்களிடம் கூறுகையில், நேற்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 

அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் 122 பேர் போட்டியிடுகின்றனர். 

மேலும் அவர்களுக்கான சின்னங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 80 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 8,530 பேர் தபால் ஓட்டு போட விருப்பம் தெரிவித்துள்ளனர்’ என்றார். 

ஆய்வின்போது திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.அரவிந்த், பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் பிரமிளா, துணை போலீஸ் சூப்பிரண்டு கோடீஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமாரசாமி, கல்லூரி டீன் ஆர்.அருளரசன் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story