திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பொருளியல் மன்ற தொடக்கவிழா
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பொருளியல் மன்ற தொடக்க விழா நடந்தது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை பொருளியல் மன்ற தொடக்கவிழா, கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமையில் நடந்தது. பேராசிரியர் முத்துக்குமார் வரவேற்றார். பொருளியல் துறை தலைவர் சி.ரமேஷ் சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்து பேசினார். முதுகலை பொருளியல் மன்றத்தின் சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி வ.உ.சி.கல்லூரியின் ஓய்வுபெற்ற பேராசிரியர் காந்திமதிநாதன் கலந்து கொண்டு, பொருளியல் படிப்பின் முக்கியத்துவம் மற்றும் பொருளியல் படிக்கும் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு, போட்டி தேர்வுக்கு தயார் செய்யும்முறை பற்றி எடுத்துரைத்தார். மாணவ செயலாளர் சுபலட்சுமி நன்றி கூறினார். மேலும், இளங்கலை பொருளியல் மன்றத்தின் சிறப்பு விருந்தினராக கல்லூரி விலங்கியல்துறை தலைவர் சுந்தரவடிவேல் கலந்து கொண்டு, கொரோனா தொற்று பற்றியும், பரவும் முறை குறித்தும், நோய் தடுப்பு முறைகளையும், நோய் தடுப்பில் மாணவர்களின் பங்கு பற்றியும் பேசினார். மாணவ செயலர் சரவணன் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பொருளியல்துறை பேராசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story