கோவில்பட்டியில் ரூ.1.10 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் 2பேர் கைது


கோவில்பட்டியில் ரூ.1.10 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் 2பேர் கைது
x
தினத்தந்தி 23 March 2021 6:51 PM IST (Updated: 23 March 2021 6:51 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில், ரூ.1.10 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவில்பட்டி:
கோவில்பட்டி கிழக்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கோவில்பட்டி புதுகிராமம் திருமங்கைநகரைச் சேர்ந்த தங்க மாரியப்பன் (வயது 52), கோவில்பட்டி கடலைக்கார தெருவைச் சேர்ந்த மாரியப்பன் (54) ஆகியோர் தங்களது வீட்டின் அருகே தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் வழக்குப்பதிவு செய்து தங்க மாரியப்பன் மற்றும் மாரியப்பன் ஆகிய இருவரையும் கைது செய்தார். மேலும், அவர்களிடமிருந்து ரூ.1.10 மதிப்பிலான 3 ஆயிரம் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

Next Story