கிணறு திடீரென உள்வாங்கியது
வேதாரண்யம் அருகே கிணறு திடீரென உள்வாங்கியது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே கிணறு திடீரென உள்வாங்கியது.
சமுதாய கிணறு
நாைக மாவட்டம் வேதாரண்யம் அருகே கோவில்பத்து கிராமத்தில் மாரியம்மன் கோவிலுக்கு எதிரே அரசு புறம்போக்கு இடத்தில் சமுதாய கிணறு உள்ளது.
இந்த கிணறு கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு 12 அடி அகலத்தில் அமைக்கப்பட்டது. இந்த கிணற்றில் இருந்து தான் அந்த பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.
திடீரென உள்வாங்கியது
இந்த நிலையில் நேற்று காலை அந்த சமுதாய கிணற்றின் மேற்கு பகுதி திடீரென உள்வாங்கியது.இதுகுறித்து தகவல் அறிந்த தலைஞாயிறு ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் மலர்விழி செல்வராஜ், கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் விமலா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து கிணற்றை முழுவதுமாக மூடும் பணி தொடங்கியது. வேறு தனியார் கிணற்றில் இருந்து அந்த பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.விரைவில் அரசு அனுமதி பெற்று வேறு அரசு இடத்தில் சமுதாய கிணறு அமைக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story