கொரோனாவுக்கு ஜவுளிக்கடை உரிமையாளர் பலி


கொரோனாவுக்கு ஜவுளிக்கடை உரிமையாளர் பலி
x
தினத்தந்தி 23 March 2021 9:36 PM IST (Updated: 23 March 2021 9:36 PM IST)
t-max-icont-min-icon

நாகூரில் கொரோனாவுக்கு ஜவுளிக்கடை உரிமையாளர் உயிரிழந்தார். இதை தொடர்ந்து அந்த ஜவுளிக்கடையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

நாகூர்:
நாகூரில் கொரோனாவுக்கு ஜவுளிக்கடை உரிமையாளர் உயிரிழந்தார். இதை தொடர்ந்து அந்த ஜவுளிக்கடையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
ஜவுளிக்கடை உரிமையாளர் பலி
தமிழக அரசின் விதிமுறைகளை பொதுமக்கள் கடைப்பிடிக்கத் தவறியதால், தமிழகத்தில் மீண்டும் கொரோனா இரண்டாவது அலை வீச தொடங்கியுள்ளது. இந்த நிலையில் நாகை மாவட்டம் நாகூரை சேர்ந்த ஒரு ஜவுளி கடை உரிமையாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அமைதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அவர், பரிதாபமாக உயிரிழந்தார்.இதை தொடர்ந்து அந்த ஜவுளிக்கடையில் பணிபுரியும் 30-க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்களுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் மூலம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 
நடவடிக்கை
மேலும் தொற்று பரவாமல் இருப்பதற்காக ஜவுளி கடையை மூடி நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி அவரது உடலை அடக்கம் செய்வதற்கு சுகாதாரத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுத்துள்ளது.

Next Story