தூத்துக்குடியில் தேர்தல் விதிமுறை மீறியதாக 101 வழக்குகள் பதிவு


தூத்துக்குடியில் தேர்தல் விதிமுறை மீறியதாக 101 வழக்குகள் பதிவு
x
தினத்தந்தி 23 March 2021 9:41 PM IST (Updated: 23 March 2021 9:41 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் தேர்தல் விதிமுறை மீறியதாக 101 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. நடத்தை விதிமுறைகளை மீறும் அரசியல் கட்சிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. 
அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அ.தி.மு.க. மீது 21 வழக்குகளும், தி.மு.க.வினர் மீது 24 வழக்குகளும், பா.ஜனதா கட்சியினர் மீது 4 வழக்குகளும், காங்கிரசார் மீது 12 வழக்குகளும், அ.ம.மு.க.வினர் மீது 9 வழக்குகளும், மக்கள் நீதி மய்யம் கட்சியினர் மீது 2 வழக்குகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மீது ஒரு வழக்கும், நாம் தமிழர் கட்சியினர் மீது 5 வழக்கு உள்பட 101 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
இதில் அதிகபட்சமாக கோவில்பட்டி தொகுதியில் 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

Next Story