உடன்குடி அருகே கல்லால் அய்யனார் கோவில் பங்குனி திருவிழா
உடன்குடி அருகே கல்லால் அய்யனார் கோவில் பங்குனி திருவிழா
உடன்குடி:
உடன்குடி கூழையன்குண்டு கல்லால் அய்யனார் கோவில் பங்குனி உத்திர திருவிழா வருகிற 27-ந் தேதி (சனிக்கிழமை) தொடங்குகிறது.
மறுநாள் அதிகாலை 5 மணிக்கு கடல் தீர்த்தம், மேளதாளத்துடன் ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வருதல், காலை 6 மணிக்கு மகா கணபதி ஹோமம், தொடர்ந்து மகாலட்சுமி யாகம், காலை 7 மணிக்கு பால்குட பவனி வருதல், காலை 8 மணிக்கு மகா கல்லால் அய்யனார் வைத்திலிங்க சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா அபிஷேகம் நடக்கிறது.
காலை 10 மணிக்கு வில்லிசை, மதியம் 12 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, மாலை 5 மணிக்கு சிறப்பு திருவிளக்கு பூஜை நடக்கிறது. இரவு 10 மணிக்கு முளைப்பாரி எடுத்து பவனி வருதல், நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை, 29-ந் தேதி காலை 10 மணிக்கு வில்லிசை, 12 மணிக்கு பத்திரகாளி அம்மன் மஞ்சள் நீராடுதல், தொடர்ந்து பத்திரகாளி அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுடன் அள்ளி ஊத்தில் நீராடுதல், நள்ளிரவு 12 மணிக்கு சுடலைமாடசுவாமி நடு ஜாம பூஜைக்கு சுவாமிகளுடன் தில்லை வனம் சென்று வருதல், 30-ந் தேதி அதிகாலை 2 மணிக்கு சிறப்பு பொங்கலிட்டு படைப்புகளுடன் அலங்கார பூஜை நடக்கிறது.
Related Tags :
Next Story