தூத்துக்குடியில் தொடர்கொள்ளையில் ஈடுபட்டு வந்த குற்றவாளி கைது


தூத்துக்குடியில் தொடர்கொள்ளையில் ஈடுபட்டு வந்த குற்றவாளி கைது
x
தினத்தந்தி 23 March 2021 9:54 PM IST (Updated: 23 March 2021 9:54 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த குற்றவாளி கைது செய்யப்பட்டான்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் கடந்த 2 மாதங்களாக தொடர்ச்சியாக பல்வேறு வீடுகளின் கதவை உடைத்து கொள்ளை சம்பவங்கள் நடந்து வந்தன. இதில் தொடர்்புடைய கொள்ளையனை பிடிக்க இன்ஸ்பெக்டர் ஜெயந்தி, சப்-இன்ஸ்பெக்டர் வேல்ராஜ் ஆகியோர் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் நேற்று தூத்துக்குடி விவேகானந்தா நகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்த வேலூர் மாவட்டம் கிருஷ்ணாம் பேட்டையை சேர்ந்த சாந்தகுமார் மகன் அப்பன்ராஜா (வயது 29) என்பவரை கைது செய்தனர். இவர் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தாராம். கடந்த 2 மாதத்துக்கு முன்பு தூத்துக்குடிக்கு வந்து கொள்ளையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. அவரை தாளமுத்துநகர் போலீசார்  கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 16 பவுன் தங்கநகைகள், 3 எல்.இ.டி. டி.விக்கள், 4 செல்போன்கள், 2 ஹோம் தியேட்டர்கள் உள்ளிட்ட ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 

Next Story