நன்னிலம் அருகே பறக்கும்படை சோதனையில் 10 ஆயிரம் துணிப் பைகள் பறிமுதல்
நன்னிலம் அருகே பறக்கும்படை சோதனையில் 10 ஆயிரம் துணிப்பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
நன்னிலம்:-
நன்னிலம் அருகே பறக்கும்படை சோதனையில் 10 ஆயிரம் துணிப்பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
கண்காணிப்பு பணி
தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதன் காரணமாக தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது.
ஆங்காங்கே சோதனைச் சாவடிகள் அமைத்தும் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்காளர்களுக்கு ஓட்டுக்காக பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்படுவதை தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
10 ஆயிரம் துணிப்பைகள்
இந்த நிலையில் நேற்று மாலை கங்களாஞ்சேரியில் உள்ள சோதனைச் சாவடி அருகே பறக்கும் படையினர் ஒரு காரை மறித்து சோதனை செய்தனர்.
அப்போது அதில் 10 ஆயிரம் வெள்ளை நிற துணிப்பைகள் எடுத்து செல்வது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் துணிப்பைகள் எதற்காக, எங்கு கொண்டு செல்லப்படுகிறது? என காரில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.
ஆவணங்கள் இல்லை
விசாரணையில் திருவாரூர் பகுதியில் இருந்து இந்த பைகள் நன்னிலத்தில் உள்ள ஒரு இனிப்பு கடைக்கு கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.
ஆனால் எந்தவித ஆவணங்களும் இல்லாததால் அந்த பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் உரிய ஆவணத்தை காண்பித்து பைகளை எடுத்து செல்லும்படி அதிகாரிகள் காரில் வந்தவர்களிடம் அறிவுறுத்தினர்.
Related Tags :
Next Story