பணம் பறித்த பலே திருடன் கைது


பணம் பறித்த பலே திருடன் கைது
x
தினத்தந்தி 23 March 2021 10:45 PM IST (Updated: 23 March 2021 10:45 PM IST)
t-max-icont-min-icon

பணம் பறித்த பலே திருடன் கைது செய்யப்பட்டான்

சோழவந்தான்,மார்ச்
சோழவந்தான் அருகே உள்ள அலங்காநல்லூர் கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன் (வயது 35). இவர் சி.புதூர் கிராமத்தில் இருந்து மெயின் ரோட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தபோது ஒருவன் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து செல்போன் மற்றும் பணத்தை பறித்துச் சென்றான். 
உடனே அவர் கூச்சல் போடவே அக்கம் பக்கத்தினர் அந்த திருடனை விரட்டிப்பிடித்து சோழவந்தான் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்தியதில், அவன் வயலூர் கிராமத்தைச் சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ் (20) என்பது தெரிய வந்தது. 
இதைத் தொடர்ந்து அவனிடமிருந்து செல்போன், மோட்டார் சைக்கிள் மற்றும் பணத்தை போலீசார் கைப்பற்றினர். சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் வழக்குப்பதிவு செய்து அவனை கைது செய்தார். சமயநல்லூர், வாடிப்பட்டி, நாகமலை புதுக்கோட்டை ஆகிய போலீஸ் நிலையங்களில் விக்னேஷ் மீது வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது.

Next Story