பக்தர்கள் முககவசம் அணிந்து வர அறிவுரை


பக்தர்கள் முககவசம் அணிந்து வர அறிவுரை
x
தினத்தந்தி 23 March 2021 10:51 PM IST (Updated: 23 March 2021 10:51 PM IST)
t-max-icont-min-icon

திருப்புவனம் கோவில் திருவிழா குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

திருப்புவனம்,

திருப்புவனத்தில் உள்ள புஷ்பவனேசுவரர்- சவுந்திரநாயகி அம்மன் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் கொரோனா பரவலை தடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். சேதுராமு தலைமையில் கோவிலில் நடைபெற்றது. பேரூராட்சி செயல் அலுவலர் சந்திரகலா, கோவில் சூப்பிரண்டு செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளதால் திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் அவசியம் முக கவசம் அணிந்து வரவேண்டும். கைகளை அடிக்கடி கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். தனிமனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும், கோவில் மற்றும் சுற்றுப்புற வளாகத்தை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பேணிக்காக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விதிகளை மீறினால் சுகாதாரத்துறை மற்றும் பேரூராட்சி மூலமாக அபராதம் வசூலிக்கப்படும் எனவும் பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கூட்டத்தில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுந்தரராஜன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், பேரூராட்சி அலுவலக பணியாளர்கள், கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story