பொள்ளாச்சியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மனித சங்கிலி
பொள்ளாச்சியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மனித சங்கிலி நடந்தது.
பொள்ளாச்சி,
சட்டமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி தேர்தல் அதிகாரிகள் சார்பில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பொள்ளாச்சியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
அங்குள்ள என்.ஜி.எம். கல்லூரியில் இருந்து பஸ் நிலையம், காந்தி சிலை வழியாக மாணவ, மாணவியர்கள் வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணியாக சென்றனர்.
தொடர்ந்து, சப்-கலெக்டர் அலுவலகம் அருகே மாணவர்கள் மனித சங்கிலி நடந்தது. இதில், பொள்ளாச்சி தாசில்தார் தணிகைவேல் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இதில் ஏராளமான மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி நின்றனர்.
Related Tags :
Next Story