மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்


மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்
x
தினத்தந்தி 23 March 2021 11:33 PM IST (Updated: 23 March 2021 11:33 PM IST)
t-max-icont-min-icon

மலையரசி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி நடந்த மஞ்சு விரட்டில் காளைகள் சீறிப்பாய்ந்தன.

திருப்பத்தூர்,

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நெடுமரம் ஸ்ரீமலையரசி அம்மன் கோவிலில் பங்குனித்திருவிழா நடைபெறும். இந்த திருவிழாவை நெடுமரம், என்.புதூர், சில்லாம்பட்டி, ஊர்க்குளத்தான்பட்டி, உடையநாதபுரம் ஆகிய 5 கிராம மக்கள் நடத்துகின்றனர். இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தலையொட்டி மஞ்சுவிரட்டு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கோவில் திருவிழாவையொட்டி அனுமதியின்றி கிராம மக்கள் ஆங்காங்கே கட்டு மாடுகளை அவிழ்த்து விட்டனர். சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினர். சில காளைகள் பிடிபட்டன. சில காளைகள் மாடுபிடி வீரர்களின் பிடியில் இருந்து தப்பித்தது. காளைகள் முட்டியதில் 5 பேர் காயம் அடைந்தனர்.


Next Story