கல்வராயன்மலையில் 2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
கல்வராயன்மலையில் 2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
கள்ளக்குறிச்சி
கச்சிராயப்பாளையத்தை அடுத்த கல்வராயன் மலையில் உள்ள நீரோடைகளில் வரும் தண்ணீரை பயன்படுத்தி சமூக விரோதிகள் கள்ளச்சாராயம் காய்ச்சி பல்வேறு பகுதிகளுக்கு கடத்தி சென்று விற்பனை செய்து வருகின்றனர். தற்போது தேர்தல் காலம் என்பதால் கல்வராயன் மலைப்பகுதியில் போலீசாரும், மதுகடத்தல் மற்றும் விற்பனையை கண்காணிக்கும் குழுவினரும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கல்வராயன்மலை கொடியனூர் நீர்வீழ்ச்சி அருகில் சாரய ஊறல் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக்குக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கரியாலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரைராஜ், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் கொடியனூர் நீர்வீழ்ச்சி பகுதிக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு 500 லிட்டர் கொள்ளளவுள்ள 4 பேரல்களில் 2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்த போலீசார் அவற்றை தரையில் கொட்டி அழித்தனர். மேலும் சாராய ஊறலை பதுக்கி வைத்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story