கூடலூர் பகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் தேர்தல் அதிகாரி திடீர் ஆய்வு
கூடலூர் பகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் தேர்தல் அதிகாரி திடீர் ஆய்வு செய்தார்.
கூடலூர்,
சட்டமன்ற தேர்தலையொட்டி நீலகிரி மாவட்டத்தில் 3 தொகுதிகளில் தேர்தல் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கூடலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கூடலூர் நகரில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் தேர்தல் பார்வையாளர் ராகுல் திவாரி திடீர் ஆய்வு நடத்தினார்.
ஹெல்த்கேம்ப், துப்புகுட்டிபேட்டை உள்ளிட்ட இடங்களில் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்டார். பின்னர் கல்குவாரி பகுதிக்கு நடந்து சென்று அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினார்.
அப்போது குறிப்பிட்ட கட்சிக்கு ஓட்டு போடுங்கள் என யாராவது மிரட்டினார்களா என கேட்டார். இதற்கு அப்பகுதி மக்கள் இல்லை என பதிலளித்தனர்.
தொடர்ந்து துப்புகுட்டி பேட்டை பகுதி மக்களின் வீடுகளுக்கு தேர்தல் பார்வையாளர் ராகுல் திவாரி நேரடியாக சென்று கட்சியினர் யாரும் பணம் வழங்கினார்களாக என்று விசாரணை நடத்தினார்.
தொடர்ந்து தேர்தல் விதிமுறைகள் முறையாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தினார். இதேபோல் நடுவட்டம், பைக்காரா உள்பட பல வாக்குச்சாவடிகளுக்கு சென்று ஆய்வு செய்தார்.
Related Tags :
Next Story