மருத்துவக்கல்லூரி பயிற்சி டாக்டர்கள் பணியை புறக்கணித்து போராட்டம்
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியில் பயிற்சி டாக்டர்கள் தங்களது பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அண்ணாமலைநகர்,
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை கடலூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரியாக மாற்றியதோடு, மாணவர்களிடம் அரசு கல்வி கட்டணம் வசூலிக்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டது.
ஆனால் குறைக்கப்பட்ட அரசு கல்வி கட்டணம் அடுத்த கல்வி ஆண்டில் தான் நடைமுறைக்கு வரும் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது. இதற்கு மாணவர்கள், பயிற்சி டாக்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து அவர்கள், நடப்பு கல்வியாண்டு முதலே குறைக்கப்பட்ட அரசு கல்வி கட்டணத்தை பெற வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் போராட்டம் நேற்று 26-வது நாளாக நீடித்தது.
தேர்வு
இதில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் பயிற்சி டாக்டர்கள் தங்களது பணியை புறக்கணித்தனர். பின்னர் அவர்கள் மருத்துவக்கல்லூரி மாணவ-மாணவிகளுடன் சேர்ந்து பல்கலைக்கழக நிர்வாக அலுவலகம் அருகே கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் நேற்று முதல் நடந்து வரும் தேர்வுகளையும் புறக்கணித்தனர். அப்போது அவர்கள் குறைக்கபட்ட கல்வி கட்டணத்தை வசூலிக்க கோரி தரையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story