சேலை, மளிகை பொருட்கள் பறிமுதல்
இலுப்பூர் அருகே பறக்கும்படைசோதனையில் சேலை, மளிகை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அன்னவாசல், மார்ச்.24-
விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இலுப்பூர் தாமரை ஊரணி அருகே பறக்கும்படை அலுவலர் ராமு தலைமையில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒருகாரை நிறுத்தி சோதனை செய்தனர்.அதில் பச்சை நிற இரட்டை இலை சின்னம் பொறித்த சேலை 20 மற்றும் 50 கிராம் எடை கொண்ட மிளகாய் தூள் 40 பாக்கெட்கள், மல்லித்தூள் 80 பாக்கெட்கள், மஞ்சள்பொடி 40 பாக்கெட்கள், பிஸ்கெட் 34 பாக்கெட்கள், ஒருடைரி ஆகியவை இருந்தன. மேலும் அவைகள் உரிய ஆவணம் இன்றி எடுத்து சென்றது கண்டறியப்பட்டது. இதை எடுத்து வந்த பேராவூரணி வீரக்குடியை சேர்ந்த ரமேஷ் (வயது 40) மற்றும் சேலை, மளிகை பொருட்களை இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான தண்டாயுதபாணியிடம் ஒப்படைத்தனர். பின்னர் பறக்கும்படை அதிகாரி ராமு இதுகுறித்து மேல் நடவடிக்கைக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

Related Tags :
Next Story