வீடு புகுந்து 6¾ பவுன் நகை கொள்ளை


வீடு புகுந்து 6¾ பவுன் நகை கொள்ளை
x
தினத்தந்தி 24 March 2021 1:29 AM IST (Updated: 24 March 2021 1:29 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசியில் வீடு புகுந்து நகையை கொள்ளையடித்து சென்றனர்.

சிவகாசி, 
சிவகாசி ஏ.வி.டி. நடுத்தெருவை சேர்ந்தவர் பத்ருபாலன் (வயது 37). இவரது வீட்டில் போதிய இடவசதி இல்லாததால் தன்னுடைய தாய் வீட்டின் மாடியில் பீரோவை வைத்து பயன்படுத்தி வந்தார். 
இந்தநிலையில் அந்த பீரோவில் நகைகள் மற்றும் சேமிப்பு பணங்களை பாதுகாத்து வந்தார். இதற்கிடையில் கடந்த 2.10.2019 அன்று மர்ம ஆசாமிகள் பத்ருபாலன் தாய் வீட்டிற்கு நுழைந்து அங்கிருந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 6¾ பவுன் நகைகள் மற்றும் ரொக்கம் ரூ.24 ஆயிரத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து பத்ருபாலன் சிவகாசி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து பத்ருபாலன் சிவகாசி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த கோர்ட்டு பத்ருபாலன் புகார் குறித்து வழக்குபதிவு செய்து உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டது. இதை தொடர்ந்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.



Next Story